/* */

கோவையில் 4 தொழிற்பேட்டைகளையும் உடனே செயல்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

HIGHLIGHTS

கோவையில் 4 தொழிற்பேட்டைகளையும் உடனே செயல்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரமான கோவை தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாவட்டம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் பெரும் பங்களித்து வருகிறது. துணை மின் நிலையங்கள், சாலைகள் போன்ற பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளும் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று தொழில்முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் நான்கு தொழிற்பேட்டைகளிலும் தொழில் தொடங்க அதிகமானோர் முன்வரவில்லை. "கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா) இரண்டு தொழிற் பூங்காக்கள், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் (கோசிமா) தொழிற்பேட்டை ஆகியவற்றில் மூன்று மாதங்களில் பொதுவான உள் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படும்" என்று, கோவை மாவட்ட தொழில் மையம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வாரப்பட்டியில் அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்காவிலும் பணிகள் தாமதமாகி வருகின்றன. இங்கு தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்தவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளிலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக முடித்து அதிகமானோர் தொழில் தொடங்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதில் செய்யப்படும் தேவையற்ற தாமதம் கோவையின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் இதில் கவனம் செலுத்தி கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளையும் விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 14 March 2024 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது