மேம்பாலப்பணி: கோவையில் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலப்பணி: கோவையில் போக்குவரத்து மாற்றம்
X

போக்குவரத்து மாற்றம் - பைல் படம்

கோவை-அவினாசி ரோட்டில் மேம்பால பணி காரணமாக தண்டு மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண சிக்னல் இல்லா நடைமுறையை போக்குவரத்து காவல்துறையினர்நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன்படி சுங்கம், சிங்காநல்லூர், லட்சுமி மில் சிக்னல், புரூக்பாண்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் சிக்னல்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் கோவை-அவினாசி ரோட்டில் மேம்பால பணி காரணமாக ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இந்த சிக்னல் செயல்பாட்டை போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தினர்.

இதன்படி காவல் ஆணையர் அலுவலம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் உப்பிலி பாளையம் சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்பி தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக செல்லலாம்.

இதேபோல் நஞ்சப்பா ரோட்டில் இருந்து ரயில் நிலையம், உக்கடம் செல்லும் வாகனங்கள் தண்டுமாரியம்மன் கோவில் அருகே திரும்பி செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!