கோவையில் பொம்மை கொலு கண்காட்சி தொடக்கம்

கோவையில் பொம்மை கொலு கண்காட்சி தொடக்கம்
X

கோவை ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் நடைபெறும்  பொம்மை கொலு கண்காட்சி 

கோவை ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி நடைபெறுகிறது

கோவை ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில் கிராப் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் பொம்மை கொலு கண்காட்சி இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

நவராத்திரி கொண்டாட்டங்கள் பொம்மைக் கொலு இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. தங்களது வாழ்நாள் முழுவதிலும் பாரம்பரியமாக வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலர். எண்ணற்றவர்களின் கொலுவை காண வருவோர், பாடல்கள், தாம்பூ லம், ஒவ்வொரு நாளும் எந்த வகையான சேலை உடுத்துவது, பாரம்பரியமிக்க இனிப்பு மற்றும் கார வகைகள் பரிமாறுதல், கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தல் போன்றவை ஆர்வமுடன் நம்மால் அர்ப்பணிக்கப் படுகின்றன.

வாழ்க்கையை கொண்டாடுவதோடு, கொலு பொம்மைகள் வடிவில், ஒவ்வொரு உயிரினப்படைப்பிலும் தெய்வீகத்தை போற்றுவோம். உயிரற்ற பொருளாக இருந்தாலும், அதன் வண்ணங்களும், அதன் பாவனைகளும் வாழ்க்கை முறையை உயிர்ப்பிக்கின்றன.

ஆண்டு முழுவதும் கைவினை கலைஞர்கள் உருவாக்கிய பொம்மைகளுக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே சிறப்புகள் கிடைக்கின்றன. குறைந்த அளவே இந்த பாரம்பரியமிக்க விழாவை கொண்டாடுவதால், பல கைவினைஞர்களின் தொகுப்புகளுக்கு குறைந்த நாட்களுக்கு மட்டுமே வேலை இருக்கின்றன. தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில், கைவினை கலைஞர்களின் வாழ்வில் வண்ணங்களையும், ஒளியூட்டவும், கடந்த ஆண்டில் கோவையில் இரண்டு பொம்மை தொழில் தொகுப்புகளை உருவாக்கியுள்ளது.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil