குப்பைத்தொட்டிகளுடன் கூடிய தள்ளுவண்டியை துவக்கி வைத்த மேயர்
கோவை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பைத்தொட்டிகளுடன் கூடிய தள்ளுவண்டியை ஒப்படைத்து தொடக்கி வைத்த மேயர் கல்பனாஆனந்தகுமார்
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக் 176 புதிய குப்பைத் தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஆகியோர் வழங்கினார்கள்.
இதில், மாநகராட்சி துணை ஆணையாளர் க. சிவகுமார், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு , பொதுசுகாதாரக் குழுத் தலைவர் பெ. மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன், வித்யா இராமநாதன், வி. சுமா, கமலாவதிபோஸ், அன்னக்கொடி, வைரமுருகன், பார்த்திபன், சர்மிளா சுரேஷ்நாராயணன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu