பொம் மை துப்பாக்கிகளுடன் மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்

பொம் மை துப்பாக்கிகளுடன் மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்

பொம்மை துப்பாக்கிகளுடன் இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தினர்

தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருப்பவர் லோட்டஸ் மணிகண்டன். இக்கட்சியினர் மக்கள் குறை தீர்ப்பு நாட்களில் நூதன முறைகளில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் அவ்வமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கலர் கலர் பொம்மை துப்பாக்கியை கைகளில் ஏந்திய படி வந்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மணிகண்டன் கூறுகையில், தான் இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்து வருகின்றேன் எனவும், கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக புகார் அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இதனால் எனக்கு மத ரீதியாகவும், அதேபோல பல்வேறு சமூக பிரச்சனைகளை கையில் எடுப்பதால் அவர்கள் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். எனவே தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது எனவும், என்னை தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து காவல் துறையினர் அவரை மனு அளிப்பதற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து பாதுகாபிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டி, இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story