தவழ்ந்தபடி மனு அளிக்க வந்த 80 வயது முதியவர்: உதவி செய்த போலீசார்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிவராமன் என்ற 80 வயதான மாற்றுத்திறனாளி மனு அளிப்பதற்காக தரையில் தவழ்ந்து வந்திருந்தார். கோடைக் காலம் தொடங்கி உள்ளதால், வெயிலில் தாக்கமும் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மிகுந்த சிரமத்துடன் கையில் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரையில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் அவரை அமர வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். காரமடை பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்ற அந்த மாற்றுத்திறனாளி தனக்கு 80 வயது ஆவதாகவும், இரண்டு கால்கள் இல்லை இதனால் எங்கு செல்வதற்கும் சிரமமாக இருப்பதாகவும் கூறிய அவர், தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கக் கூடிய பெட்ரோல் வாகனம் கொடுத்தால் வாழ்வாதத்திற்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு வாழ முடியும் என மனு கொடுத்திருந்தார்.
மேலும் கடந்த ஆறு மாத காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை என மாற்றுத்திறனாளி சிவராமன் தெரிவித்தார். மேலும் அவர் தரையில் தவழ்ந்து வந்ததை பார்த்து விட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து அவரை, குறைத்தீர்ப்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய மனுவை கொடுத்து விட்டு, மீண்டும் அவரை பேருந்து நிலையம் வரைக்கும் காவலர்கள் அழைத்துச் சென்று விட்டனர். வயதான மாற்றுத்திறனாளிகளுக்கு காவலர்கள் உதவி செய்ததற்கு அப்பகுதியில் இருந்த மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu