மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் கட்சியினர் போராட்டம்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் கட்சியினர் போராட்டம்
X

பைல் படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்களை அகற்றக்கூடாது. 269 சதுரஅடி வீட்டுக்கு சேவைக் கட்டண குடிநீர் என்று இருப்பதை 500 சதுரஅடியாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சி.பத்மநாதன் தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியபடி வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும். இந்தியாவில் மும்பைக்கு அடுத்த அதிக தொழில் முதலீடுகளை கொண்டுள்ள ஓர் மாநகரம் ஆகும்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்டுள் ளது. இது சுமார் 306.4 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும். தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். சென்னை மாநகராட்சியைப் போலவே பல நகராட்சிகளையும் பல பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆண்டு வருவாய் ஏறத்தாழ 754 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிட்சிகளில் வரி வசூலில் இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது.

கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!