கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக சட்ட நலன்களை பாதுகாக்க அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகா சம்பளமும் மற்றும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் இணைந்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் மூலமாக கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய தந்தி அலுவலகம் அருகில் கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் கொடுத்துள்ள மனுவில், ”இந்தியாவில் 10 கோடிக்கும் மேல்கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்காக 1996 கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டமும், மத்திய நல வரி வசூல் சட்டமும் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டங்கள் தனித்தனி சட்டங்களாகவே தொடர வேண்டும் என்றும், இந்த சட்டங்களை எந்த குறியீட்டிலும் இணைக்க கூடாது என்றும் வேண்டுகிறோம். கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக சட்ட நலன்களை பாதுகாக்க 5% சதம் நலநிதி உயர்த்தி நிர்ணயித்து உரிய காலத்தில் காரராக வசூலிக்க வேண்டும். 60 வயதான தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது ஓய்வூதியமாக ரூபாய் 6,000/- வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை குறிப்பாக அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் மகா சம்மேளனம் AICBCW, தமிழ் நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் AITUC பிரதிநிதிகளை வாரிய நிர்வாக அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான கட்டுமான பணி இடங்களில் பெருமளவு விபத்துக்கள் நாள்தோறும் நடக்கிறது, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேவையான மருத்துவ உதவி கிடைப்பதில்லை, பத்து கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இபிஎப் திட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மத்திய சட்டம் 9/281 ஏ விதியின் படி தீபாவளி பரிசாக ரூபாய் 5000 பாண்டிச்சேரியில் வழங்கப்படுவதைப் போல வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu