கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு
கோவை மாநகராட்சி 80வது வார்டில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்
கோவை மாநகராட்சி 80வது வார்டில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி 80வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாலாஜி அவன்யூ மாநகராட்சி பூங்கா, கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் மற்றும் பொது சுகாதார குழு தலைவர் பெ. மாரிசெல்வன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.80 ஆவது வார்டில் நடைபெறுகின்ற பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வில்,உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி செயற் பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் பெரிய கடை வீதி பகுதி 2 துணை செயலாளர் முருகேசன், வார்டு செயலாளர் தங்கவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவை நகராட்சி 1866-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோவை மாநகர் மன்றமாக செயல் படும் விக்டோரியா டவுன் ஹால் 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 1981-ம் ஆண்டு கோவை மற்றும் சிங்கநல்லூர் நகராட்சிகளை இணைத்து கோவை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1996-ம் ஆண்டு முதல் மேயர் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோவை இரண்டாவது பெரிய மாநகராட்சி யாக உள்ளது. இதில், மொத்தம் 100 வார்டுகள் அடங்கியுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu