பிரதமர்வருகையை முன்னிட்டு மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

பிரதமர்வருகையை முன்னிட்டு மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி
X

ஒத்திகை நிகழ்ச்சி

இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பொது மக்களை பிரதமர் மோடி நேரடியாக சந்திக்கிறார்

கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையிலான பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பொது மக்களை பிரதமர் மோடி நேரடியாக சந்திக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கோவை சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி படையினர், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரதமர் வாகனம் செல்லும் அந்தப் பகுதிகளில் சந்தேகப்படும் படியான இடங்கள் அனைத்தும் காவல்துறையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் அந்தப் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு 24 மணி நேரமும் காவல்துறை ரோந்து வாகனங்கள் சென்று வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடைய பிரதமர் வருகையொட்டி இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதில் விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் அங்கிருந்து காரில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சாய்பாபா கோவில் சந்திப்புக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து சாய்பாபா கோவில் சந்திப்பிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரை ரோட் ஷோவில் கலந்து கொள்ளும் ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல்துறை வாகனங்களும் அணிவகுத்து சென்றது. நாளை பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர்,ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா