கோவையில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ரமலான் பிரியாணி விருந்து
கிரீன் கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ அரிசி 500 கிலோ சிக்கன் பயன்படுத்தி கோவையில் "ரமலான் பிரியாணி" விருந்து நடைபெற்றது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை கிரீன் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 500 கிலோ அரிசியும் 500 கிலோ சிக்கனும் சேர்த்து "ரமலான் பிரியாணி" விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை யான ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்து களை பகிர்ந்து கொண்டனர்.
கோவையிலும் பல்வேறு இடங்களில் ரமலான் தொழுகைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து ரமலான் பண்டிகையில் இஸ்லாமியர்களின் சிறப்பு உணவாக கருதப்படும் பிரியாணியை உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் வழங்கி ரமலான்பண்டிகையை கொண்டாடுவர்.
கோவை வின்சென்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கிரீன் கார்டன் வளாகத்தில் ஆண்டுதோறும் ரமலான் பிரியாணி செய்து அனைவருக்கும் வழங்கி ரமலான் பண்டிகையை கொண்டாடுவர்.இங்கு வசிக்கும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் முன்வந்து ரமலான் பிரியாணி தயாரிப்பார்கள்..
அதன்படி இந்த ஆண்டும் சிறப்பான முறையில் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி கிரீன் கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்த ஆண்டு 500 கிலோ அரிசியில் 500 கிலோ சிக்கன் சேர்த்து சுமார் 3000 பேருக்கும் மேல் வழங்கும் வகையில் பிரியாணி தயார் செய்து அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உக்கடம் சரக உதவி ஆணையாளர் வீரபாண்டி, உக்கட காவல் நிலைய ஆய்வாளர், சரவணன், உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி, கோவை மாநகர மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், 82 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபஷிரா, அனைத்து ஜமாத் கொள்கை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹினாத்துல்லாஹ், போத்தீஸ் துணிக்கடை மேலாளர் சக்தி நாராயணன், சபையர், பைசல், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் முத்தப்பா, பிஎச் முபாரக், நச்சுமுதீன், அர்ஷத் முகமது, அசாருதீன், சபிக் ரஹ்மாம், ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu