கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை ; வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்ட ஆட்சியர்.!
ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணத்தால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிகமழை பெய்யவாய்ப்புள்ளதன் காரணத்தால் பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மழைநீர்தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள்அனைவரும் மழைபெய்யும் நேரங்களில் வெளியில் இருக்கவேண்டாம். உயர்மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் இருக்கவேண்டாம். பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். மழை மற்றும் வெள்ளநீர்தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுதல்கூடாது. வெள்ள அபாயம் அல்லது தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விருப்பப்படும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu