காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம்: மனுக்களுக்கு சுமூக தீர்வு
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது .
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் நடைபெற்றது .
மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
அதன்படி நேற்று நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான 105 மனுக்
கள், மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும், 1 மனு மீது மனு ரசீதுகள் பதிவு செய்யப்படும், 102 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட உதவி துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu