கோவை மருத்துவமனையில் மாயமான சிறுவனை பத்திரமாக மீட்ட காவலர்

கோவை மருத்துவமனையில் மாயமான சிறுவனை பத்திரமாக மீட்ட  காவலர்
X

பைல் படம்

காவலர் ஸ்ரீதர் மருத்துவமனையின் வெளிப் பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அழைத்து வந்தார்

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.

இதனிடையே கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகனான 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.

இந்த சூழலில், நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.

அப்போது மருத்துமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த முதல் நிலைக்காவலர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப் பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டியுள்ளான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.

பின்னர் முதல் நிலைக்காவலர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். காவலரின் இந்த செயல் மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சக பெற்றோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!