உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பில் போலீசார் சோதனை..!

உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பில் போலீசார் சோதனை..!
X

போலீசார் சோதனை 

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் காவல் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உக்கடம், இராமநாதபுரம், குனியமுத்தூர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் வசித்து வரும் அறைகளில் போலீசார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து சோதனையானது நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்புற மேம்பாட்டு வாரிய அடிக்குமாடி குடியிருப்புகளில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகைக்காக பெரும்பாலோனோர் ஊருக்கு சென்றிருக்கும் நிலையில், ஊருக்கு செல்லாமல் அறைகளிலேயே தங்கி இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் சோதனைகளில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!