கோவையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனைக் கூட்டம்
பைல் படம்
கோவையில் நாளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கோவையில் நாளை 28ஆம் தேதி கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கோவை, சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில், 2024ல் என்ன முடிவை எடுப்பது என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் : மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கிடைக்கவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் சொற்ப வாக்குகளில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையில் நாளை(ஏப்28) வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியல் நோக்கி திரும்பியது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu