கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாம்

பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

இந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுவதுண்டு. அவர்கள் குறைகளுக்கு அந்த முகாமிலேயே தீர்வு காண்கிற நாளாக ”மக்கள் தொடர்புத் திட்ட நாள்” அமைகிறது

இதே போல மாநகராட்சிகளில் மேயர், ஆணையர் ஆகியோர் மண்டல அளவில் குறை கேட்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai and business intelligence