குறைந்தது மீன்கள் விலை ; மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

குறைந்தது மீன்கள் விலை ; மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
X

Coimbatore News- மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள்

Coimbatore News- மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால், மீன்களின் விலை குறைந்துள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப் பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன் பிடித்தடை காலம் அறிவிக்கப்படும். இந்த கால கட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். விசை படகுகள், மீன் வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில மீனவர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு மீன் பிடித்தடைக் காலம் கடந்த ஜூன் மாதம் 14 - ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருந்தது முடிந்தது. இதனால் மீன் வரத்து குறைந்து காணப்பட்டதால், மீன்களின் விலையும் உயர்ந்து இருந்தது.

இந்த நிலையில் மீன் பிடித்தடை காலம் முடிந்து, மீனவர்கள் மீன் பிடித்து வருவதால் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலையும் குறைந்துள்ளது. இந்த நிலையில் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால், மீன்களின் விலை குறைந்து உள்ளது. இதனால் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டிற்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மீன்களை வாங்கி சென்றனர். கூட்டமும் அதிகரித்து வியாபாரமும் சூடு பிடித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!