கோவை விழாவில் கலைத்தெரு ; கலை படைப்புகளை கண்டு ரசிக்கும் மக்கள்!
Coimbatore News-கோவை விழாவில் கலைத்தெருவில் புகைப்படங்களை ஆர்வமாக பார்வையிட்ட மக்கள்.
Coimbatore News, Coimbatore News Today- கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் கலைத் தெரு (Art street) கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த ஆண்டும் கலை தெரு துவங்கி உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் அவர்களது கலைபடைப்புகள் இங்கு காட்சிபடுத்தி உள்ளனர். இன்று துவங்கிய இந்நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சி இன்று நாளையும் பந்தய சாலை ஸ்கிம் சாலையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் மணல் ஓவியங்கள், புராண உருவங்களின் சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி, ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu