கோவைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்த துணை ராணுவப்படை

கோவைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்த துணை ராணுவப்படை
X

Coimbatore News- துணை ராணுவப்படை கோவை வருகை

Coimbatore News- கோவையில் பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட பகுதிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Coimbatore News, Coimbatore News Today- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசு அதிகாரிகள் தேர்தலுக்கு ஆயுத்தமாகி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையத்திற்கு துணை ராணுவப்படையினர் வந்தனர். கோவை ரயில் நிலையில் வருகை தந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு காவல் துறையினர் வரவேற்றனர்.

பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட பகுதிகளில் துணை ராணுவ படையினர் காவல் துறையினர் உடன் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!