கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி   ஆம்னி பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு
X

பைல் படம்

ஆம்னி பேருந்துகளில் உள்ள சொகுசு வசதிகள் காரணமாகவும், வார நாட்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவுமே இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் களில் கட்டனம் கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஆம்னிபஸ் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் வேதனயடைந்துள்ளனர்

வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை காலங்களில் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அண்மையில் தீபாவளி பண்டிகையின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் 25 -ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்களின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) புறப்படும் பஸ்களின் கட்டணம் வழக்கமான நாட்களைவிட 2 மடங்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. உதாரணமாக, கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமான நாட்களில் படுக்கை வசதி கொண்ட (குளிர் சாதன வசதி இல்லாத) ஆம்னி பஸ்களில் ரூ.600 முதல் ரூ.900 வரையில் கட்டணம் இருக்கும். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தக் கட்டணத்தை உயர்த்தி, ரூ.600 முதல்ரூ.2,700 வரை நிர்ணயித்துள்ளனர்.

இதே போல், கோவையில் இருந்து தென்காசிக்கு ரூ.1,000 -ம். முதல் ரூ.1,600 வரையிலும், கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.900 ரூ.1,710 வரையிலும், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ750 முதல் ரூ.2,000 வரையிலும், கோவையில் இருந்து மதுரைக்கு ரூ.600 முதல் ரூ.2,000 வரையிலும் கட்டணத்தை நிர்ணயித்து ஆன்லைனில் குறிப்பிட்டு உள்ளனர்.

கட்டணம் குறைவாக இருக்கும் பஸ்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ,விமான டிக்கெட் கட்டணத்துக்கு இணையான வகையில் நேரம் செல்ல செல்ல ஆம்னி பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி கொண்டே செல்கின்றனர். இதனால் பயணிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வழக்கமான நாட்களில் அரசு பேருந்துகள் அளவிலான விலைக்கு பயணச்சீட்டுகளை வழங்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை நாட்களில் மட்டும் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஆனால், ஆம்னி பேருந்துகளில் உள்ள சொகுசு வசதிகள் காரணமாகவும், வார நாட்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவுமே இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய சொகுசு வசதிகளை வழங்குவதால் பண்டிகை காலங்களில் இருப்பதுதான் ஆம்னி பேருந்துகளின் உண்மையான கட்டணம்

கொரோனா பேரிடருக்கு முன் 4 ஆயிரமாக இருந்த ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 1,500 ஆகக் குறைந்துள்ளது. அந்த சமயத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிய பிறகு அதிக கட்டணம் வசூலிப்பது கிடையாது. கட்டணத்தை ஏற்றுக் கொண்டுதான் பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதுதான் எங்கள் வழக்கமான கட்டணம் மற்ற நாள்களில் நாங்கள் நஷ்டத்தில்தான் பஸ்களை இயக்குகிறோம் என்றனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், ஆம்னி பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் உச்சபட்சமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!