கோவையில் தேசிய நில அளவை நாள் புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்த மக்கள்

கோவையில் தேசிய நில அளவை நாள் புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்த மக்கள்
X

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என அழைக்கப்படும் வில்லியம் லாம்டன் கடந்த 1802ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி சென்னை புனித தோமையர் மலையில் நில அளவை பணிகளை தொடங்கினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தேசிய நில அளவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நில அளவைகள் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

இதில் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், வரைபடங்களை பெரிதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டாகிராம் கருவி, பரப்பளவை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும் பேரலல் ரூர்ல்ஸ் கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

நில அளவை வரலாற்றில் இந்தத் தினமானது முக்கியமான தினமாக விளங்குகின்றது: இத்தினத்தில் மேஜர் வில்லியம் லம்ப்டோன் என்பவர் 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மலையிலிருந்து இமயமலை வரையிலான சிறந்த வளைவைக் கணக்கிடுவதற்கான பணியான GTS (மிகப்பெரும் முக்கோணவியல் ஆய்வு) என்ற ஒரு ஆய்வைத் தொடங்கினார்.

GTS (Great Trigonometrical Survey) என்பது அறிவியல் பூர்வ அணுகுமுறையுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.இந்தியக் கள ஆய்வு நிறுவன என்பது இந்தியாவில் வரைபடமிடல் மற்றும் வரைபட ஆய்வை மேற்கொள்ளும் ஒரு மத்தியப் பொறியியல் நிறுவனமாகும்.

ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலப் பகுதிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக 1767 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது இந்திய அரசின் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.இதன் தலைமையகம் டேராடூனில் அமைந்துள்ளது. இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தின் முழக்கம், தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாம் அறிவோம் ஏனெனில் தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாம் அளந்துள்ளோம் என்பதாகும்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....