காவல்துறையினர் நடத்தும் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா

காவல்துறையினர் நடத்தும் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா
X
கோவையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா மூலம் 22 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்

கோவையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா மூலம் நேற்று(25.04.2023) மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் பேரில் காணாமல் போன 22 நபர்களை தனிப்படையினர் தேடி கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் மேளா என்ற புதிய திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிமுக படுத்தி உள்ளார்.

தமிழகத்தின் ஏனைய பகுதிகளை போலவே கோவை மாவட்டத்திலும் அவ்வப்போது சிலர் காணாமல் போகின்றனர் என்று செய்திகள் வெளியாகி வருகின்றனர். அப்படி காணாமல் போனவர்களில் சிலர் கண்டு பிடிக்கப்பட்டாலும் பலர் நீண்ட நாட்களுக்கு பின்னும் கண்டுபிடிக்கப்படாத சூழல் ஏற்படுகிறது. இவர்களை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சிறப்பு உத்தரவின் பேரில், மாவட்டத்தில் காணாமல் போய் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு "காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா நேற்றிலிருந்து (25.04.2023) அமல் படுத்தப்பட்டுள்ளது.

இது வாரந்தோறும் உட்கோட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று(25.04.2023) மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் பேரில் காணாமல் போன 22 நபர்களை தனிப்படையினர் தேடி கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் காணாமல் போய் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்காமல் உள்ள நபர்களை தேடும் இந்த மேளா வாரந்தோறும் தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் கவனத்திற்கு.. இது போன்று காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகவும். கவலை கொள்ள வேண்டாம் தொடர்பு கொள்ளுங்கள் கோவை மாவட்ட காவல்துறையை... கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்:94981-81212, மற்றும் வாட்சப் எண் 77081-00100. காணாமல் போய் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்காமல் உள்ள நபர்களை தேடும் இந்த மேளா வாரந்தோரும் தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....