லயன்ஸ் கிளப் சார்பில் பசிப்பிணி போக்கும் நிகழ்வு

லயன்ஸ் கிளப் சார்பில்  பசிப்பிணி போக்கும் நிகழ்வு

லன்யஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 டி சார்பில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சத்குரு சேவா ஆசிரமத்தில் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் 300 வது நாளை முன்னிட்டு ஆசிரமத்தில் நடந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி

லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் (மாவட்டம் 324 டி) சார்பில் 300 வது நாள் பசிப்பிணி போக்கும் நிகழ்வு நடைபெற்றது.

லன்யஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 டி சார்பில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சத்குரு சேவா ஆசிரமத்தில் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் 300 வது நாளை முன்னிட்டு ஆசிரமத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அரிமா டி ஜி எஸ் பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்றார். அரிமா கே. வி ஷா தலைமை தாங்கி பேசுகையில், அரிமா சுபா என்.சுப்ரமணியத்தின் தந்தையார் சேவைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரது சேவையை தொடர்ந்து சுபா என் சுப்பிரமணியம், லயன்ஸ் கிளம்பிற்கு சிறந்த சேவையையும் வழங்கி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக அரிமா சுபா என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். நமது நிலைமை கண்டு ஒருபோதும் அஞ்ச கூடாது. முயற்சித்தால் அனைவரும் உயர்ந்த நிலையை அடையலாம். முயற்சி திருவினையாக்கும். லயன்ஸ் கிளப் உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கும். மாணவர்கள் அனைவரும் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, 300வது நாளில் பசிப்பிணி போக்கும் திட்டத்தில் சத்குரு சேவா ஆசிரமத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரவு உணவினை வழங்கி பரிமாறினார். லயன்ஸ் கிளப் 324டி சிறுவாணி சங்கம் 300 வது நாளில் உணவினை வழங்கியது.

365 வது நாள் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அரிமா டி ஜி எஸ் பொன்னம்பலம் மற்றும் அரிமா கே. வி ஷா ஆகியோர் தொடர்ந்து 300வது நாளாக இந்த சேவையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் சிறுவாணி சங்கம் உறுப்பினர்கள் அரிமா மகாலிங்கம், அரிமா மதனகோபால், அரிமா சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story