ராஜராஜ சோழன் போல பிரதமர் மோடியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் - வானதி சீனிவாசன் பெருமிதம்

ராஜராஜ சோழன் போல பிரதமர் மோடியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் - வானதி சீனிவாசன் பெருமிதம்
X

Coimbatore News- பாஜக தேசிய மகளிரணித் தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் (கோப்பு படம்)

Coimbatore News- பிரதமர் நரேந்திர மோடி இன்றி ராமர் கோவில் சாத்தியமாகி இருக்காது. மன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் மோடியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

Coimbatore News, Coimbatore News Today- பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

அயோத்தியில் இன்று ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் தரையில் உறங்கி, கடுமையான விரதம் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது ராமரோடு தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி திரும்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றி ராமர் கோயில் சாத்தியமாகி இருக்காது. நம் தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். ராமர் கோவிலுக்காக 500 ஆண்டுகளாக போராடி அனைவருக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil