பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான் பேச்சு

பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான் பேச்சு
X

பைல் படம்

மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட பதிவில், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது. இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்கும் என பதிவிட்டுள்ளார்.

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப் பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதேநேரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் போது, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனை களுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....