கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: போக்குவரத்து மாற்றம்
கோனியம்மன் கோவில் தேர் - கோப்புப்படம்
கோயம்புத்தூர் நகரின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டள்ள அறிக்கையின்படி, பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டான வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.
வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.
மருதமலை சாலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மருத மலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் சாலை அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.
நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதற்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்திலும், 4 சக்கர வாகனங்களை உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்த்திருவிழாவையொட்டி கோவை மாநகரில் 1,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu