கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் அமைச்சர் சு. முத்துசாமி

கோவை மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

கோவை மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்கம், Y. K. G. இணைந்து நடத்திய, கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த 10, 11, 12 ம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி வைத்து, கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த 10, 11, 12 ம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கும் தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி, நற்சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.

திமுகவின் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக், திமுக மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், திமுக மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பெரிய கடை வீதி பகுதி -2 செயலாளர் வி. ஐ. பதுருதீன், வடவள்ளி பகுதி செயலாளர் வ. ம. சண்முகசுந்தரம்,

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,முன்னாள் எம்பி ஏ. பி. நாகராஜ் , திமுக மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர். கே. சுரேஷ்குமார், கோவை மாநகராட்சி நிதிக்குழு மற்றும் வரிவிதிப்புக் குழுத் தலைவர் முபசீராபக்ருதீன், வட்டக்கழகச் செயலாளர்கள் நா. தங்கவேல், டவுன் பா. ஆனந்தன், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நலச் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

Tags

Next Story