வீட்டுவசதி வாரிய வீடுகளின் பத்திரங்கள் வாங்க 53 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடி
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி
வீட்டுவசதி வாரியத்தால் கொடுக்கப்பட்ட வீடுகள் பத்திரங்கள் வாங்க 53 கோடி ரூபாய் வட்டி குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வீட்டு வசதி துறையின் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்..
கோவையில் கணபதி பகுதியில் முதல்வர் உத்தரவின்படி அனைத்து இடங்களிலும் வீட்டு வசதி துறையால் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
வீட்டு வசதி துறையால் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறதா? பொதுமக்களுக்கு எப்படி விருப்பம் இருக்கிறது? என ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் அதன் அடிப்படையில், இன்று கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம்.
கணபதி பகுதியில் 36 சென்ட் நிலம், இதில் 5 தளங்கள் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 600 சதுர மீட்டர் சதுர அடி மொத்தமாக கட்டப்பட்டுள்ளது. இது ஒரு வணிக வளாகம் இன்றைக்கு வாடகை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ஹவுசிங் போர்டு என்னென்ன விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என கேட்டு உள்ளார்கள். பத்து நாட்களில் அனுமதி கொடுத்தவுடன் வாடகைக்கு விடப்படும்.
இந்த கட்டிடத்தை பொறுத்தவரை தரமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நல்ல வாடகைக்கு போகும் என நம்பிக்கை உள்ளது. மூன்று இடங்களை நாங்கள் பார்க்க உள்ளோம். வீடுகளும் தயார் நிலையில் உள்ளது. சிங்காநல்லூர் பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட 960 வீடுகள் மிகவும் மோசமாக இருந்தது. அது இடிந்த நிலையில் இருந்தது. 75 சதவீதம் பேர் காலி செய்துள்ளார்கள்.
அதன் பிறகு எங்களிடம் வந்து சொன்னார்கள். வீட்டு வசதி வாரியம் விட்டுக் கொடுப்பதற்காக ஒரு சூழ்நிலை இல்லாததால், வீட்டு வசதி வாரியம் அவர்களை ஒருங்கிணைந்து அங்கு உள்ள 960 வீடுகள் 4 அசோசியேஷன் ஒன்று இணைந்து சிங்கிள் அசோசியேஷனாக கமிட்டி மூலமாக அவர்களே ஒரு பில்டரை தேர்ந்தெடுத்து பணிகள் தொடங்க உள்ளது. அதற்கு ஒரு சில சட்ட திருத்தங்களும் தேவைப்பட்டது. செளரிபாளையம் பகுதியில் நாங்கள் ஆய்வு செய்தோம். சாலைகள் அகலப்படுத்த வேண்டியுள்ளது.அதனை ஒழுங்குப்படுத்தி கூடுதலாக ஏதாவது செய்ய முடியுமா எனவும் ஆய்வு செய்து வருகிறோம்.
சென்னை போன்ற மற்ற இடங்களில் 12 இடங்களில் இது போன்று கேட்டுள்ளார்கள். மோசமாக உள்ள கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள், எவ்வளவு கட்டடங்கள் கட்டப்படுகிறது? என எண்ணிக்கை என்பது தேவை இல்லை. அந்தக் கட்டிடம் தரமாக உள்ளதா? என கேட்டுள்ளார். ஜாயிண்ட்மெண்ட் வென்ச்சர் என்கின்ற முறையில் கட்டப்படும் கட்டிடம் தரமாக வந்தே ஆக வேண்டும் என்கிற அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள 3000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளது. பல்வேறு முயற்சிகள் செய்து ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகி உள்ளது. காவல்துறை மொத்தமாக எடுத்து வருகிறார்கள். இதனால், பெருவாரியான வீடுகள் விற்கப்படும். எந்த பகுதியில் வீடுகள் தேவை? என கண்டறிந்து பொதுமக்கள் வாங்குகிறார்கள். அடிப்படை வசதிகள் அறிந்து வீட்டு வசதி வாரியமும் வீடுகளை கட்டி வருகிறது.
வீட்டு வசதி சங்கங்களில் 41 சங்கங்கள் எங்களிடம் வைத்த 44 கோரிக்கைகளில் 18 கோரிக்கைகள் நிறைவேற்ற சாத்தியமில்லை எனக் கூறியுள்ளோம். வீட்டு வசதி வாரியத்தில் கொடுக்கப்படும் வீடுகளுக்கு பத்திரங்கள் இல்லாமல் உள்ளது? என்ற கேள்விக்கு... வீட்டு வசதி வாரியத்தில் பல வீடுகளுக்கு பணம் செலுத்தாததால் பத்திரம் கொடுக்கவில்லை. வீட்டை வாங்கியவர்கள் கேட்கவில்லை. அந்த வீடுகள் தரமானதாக இல்லாமல் இருந்ததால் கேட்கவில்லை. சில பேர் அந்த வீட்டை விற்று விட்டார்கள். அதுபோன்ற பிரச்னைகள் உள்ளது.
முதல்வருக்கு இது போன்ற பிரச்சனை மனுவாக வந்தது. அதற்கு பிறகு பதினோராயிரம் பத்திரங்கள் கொடுக்கப்பட்டன. வட்டியில் 53 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 10 கோடியே 75 லட்சம் தொகை வரை பயனாளிகள் சலுமை பெற்றுள்ளனர். இந்தச்சலுகை வரும் மே மூன்றாம் தேதி வரை முடியவுள்ள நிலையில், அதனை மேலும் கால நீட்டிப்பு செய்யப்போகிறோம். தரமான கட்டிடம் பற்றிய கேள்விக்கு.. ஜாயின் வென்ச்சர் ஆய்வுகள் இடை இடையே நடத்தப்பட்டு அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம் என்றார் அமைச்சர் முத்துசாமி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu