நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகர் மணிகண்டன்
லவ்வர் திரைப்பட குழு.
குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன், தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கிய லவ்வர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் கவனம் பெற்றன. லவ்வர் திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் லவ்வர் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மணிகண்டன், கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன் காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி இருப்பதாக தெரிவித்தார்.
திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளதாகவும், இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் கூறிய அவர், வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜெய்பீம் படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிப்பதாகவும் சுட்டி காட்டினார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர்ஸ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu