கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின  உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்
X

Coimbatore News- உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

Coimbatore News- கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்குவதும் செய்யப்பட்டு வருகிறது.

Coimbatore News, Coimbatore News Today- ஆண்டுதோறும் பிப்ரவரி 9 ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் அரசு அலுவலகத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், துண்டு பிரசுரங்கள் வழங்குவதும் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நூதன முறைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராமகிருஷ்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கொத்தடிமை ஒழிப்பு தொடர்பாக நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் மேற்கொள்வதற்கு புறப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் மாநகர காவல் துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!