பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்து வரும் மகளிருக்கு விருது வழங்கல்
பல்வேறு பிரிவுகளிலில் தலை சிறந்து சாதனை படைத்து வரும் மகளிருக்கு கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பல்வேறு பிரிவுகளில் தலை சிறந்து சாதனை படைத்து வரும் மகளிருக்கு பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினர் தொடர்ந்து பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனை இந்த தீம் அங்கீகரிக்கிறது. Share: International Womens Day: மகளிர் தினம் 2023, மார்ச் 8 ஆம் தேதி, "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு பாரத மாதா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் பல்வேறு பிரிவுகளில் தலைசிறந்து சாதனை படைத்து வரும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி உடையாம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
இதில், வடவள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவலர் பிரேமா, சமுதாயத்தில் கணவனை இழந்த நிலையிலும் தன்னம்பிக்கை உடன் தனது குடும்பத்தையும், ஸ்ரீ லட்சுமி டிரேடர்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வரும் உடையாம்பாளையம் பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி, தனது கணவருடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநராகவும், மகளிர் குழு தலைவியாகவும் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை சாலையோர ஆதரவற்ற இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு தானே சமையல் செய்து உணவு வழங்கி வரும் மசக்காளிபாளையம் பகுதியைச் சார்ந்த திவ்யா சக்தி வேல்,
ஆதரவற்ற இல்லங்களில் படித்து வளர்ந்து தன் கணவருடன் இணைந்து தள்ளுவண்டி கடை அமைத்து நல்ல முறையில் தொழில் செய்து வரும் உடையாம்பாளையம் பகுதியைச் சார்ந்த கற்பகம் விஜய் மற்றும் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் நீலு கேட்டரிங் நிறுவனம் மூலம் பல்வேறு சமுதாய பணிகளை செய்து வரும் திருமதி கல்பனா பார்த்தீபன், ஒண்டிபுதூர் முருகன் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிறுவனர் அமரர் மகேஷ்ராஜன் விட்டுச் சென்ற மக்கள் நலபணிகளை திறம்பட செய்து வரும் அவரது துணைவியாரும் சமூகசேவகியுமான விஜயராணி, வெளிநாடுவாழ் இந்தியரகான சமூக சேவகி ஷீஜா வினோத் உள்ளிட்ட 7 மகளிருக்கு சாதனைப் பெண்கள் விருதுகளுக்கான விருது வழங்கப்பட்டது.
செளரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க சமுகநலச்சங்கத்தின் செயலாளர் சமூக சேவகர் மைக்கேல் பாபு ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தினார்.
விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் திலீப் குமார், ராஜ்குமார் ஜி, சுரேஷ், சரவணன், சக்தி வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu