கோவை மெய்நிகர் மீட்பு படை சார்பில் பழங்குடியினருக்கு நிதியுதவி
பழங்குடியினர் வீட்டுக் கட்டுமானப்பணிக்கு (VRF) மெய்நிகர் மீட்புப் படை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடை வழங்கப்பட்டது
பழங்குடியினர் வீட்டுக் கட்டுமானப்பணிக்கு (VRF) மெய்நிகர் மீட்புப் படை சார்பில் நன்கொடை
மெய்நிகர் மீட்புப் படைVRF(Virtual Rescue Force) சார்பில் அந்த அமைப்பின் ஒருங்கினைப்பாளரும் ELCE மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் வித்யா ராஜன், வால்ப்பாறையில் உள்ள பழங்குடியின கிராமத்திற்கு தங்குமிடம் உதவி வழங்கும் திட்டத்திற்கான ரூ. 1, 41, 000/-க்கான காசோலையை இன்று வழங்கினார். இந்த நன்கொடை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரிடம் நேரில் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் இ-வாகன முன்னோடியும், டாடா முதலீட்டை கோவைக்கு கொண்டு வந்தவருமான ஹேமலதா அண்ணாமலை, வால்காரூ CSR பொறுப்பு சுமித்ரா பினு ,கோவை CSR NGO ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 6 கிராமங்கள் பயனடைந்தன.ம் ஒட்டுமொத்த பங்களிப்பு ரூ. 7 லட்சம் ஆகும்.
மெய்நிகர் மீட்புப் படை உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் ஒருங்கிணைந்து சமூக ஊடகங்கள் மூலம் செயல்படும் ஆன்லைன் அடிப்படையிலான மீட்புப் படையாகுந். உலகில் எங்கும் இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், மீட்பதற்காகவும் கோவையில் ELCE மருத்துவ அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது
சென்னை வெள்ள நிவாரணப் படை, அதே அமைப்பால் உருவாக்கப்பட்ட மீட்புப் படையானது, வரம்புகளைத் தாண்டி, ஆபத்தில் இருப்பவர்களைச் சென்றடைவதற்காக, மெய்நிகர் மீட்புப் படையாக இப்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை வெள்ள நிவாரணப் படை என்பது எல்ஸ் மருத்துவ அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் டாக்டர் வித்யா ராஜனால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவாகும். இது உலகம் முழுவதும் உள்ள 100 உறுப்பினர்களைக் கொண்டு சென்னையில் டிசம்பர் 2015மழை மற்றும் வெள்ளத்தின் தொடக்கத்திலும் அதற்குப் பின்னரும் பல மீட்பு மற்றும் வெள்ள மறுவாழ்வுப் பணிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu