கோவையில் இலவச கண் பரிசோதனை முகாம்
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் , கோவை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர்
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் கோவை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை கோவைப்புதூர் ஸ்ரீரடி சாய் சேவா ஹாலில் நடத்தியது. இந்த கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆளுநர் அலையன்ஸ் டாக்டர் வி. ஸ்ரீனிவாச கிரி தொடக்கி வைத்தார்.
இந்த பரிசோதனை முகாமில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக் கான கண் அறுவை சிகிச்சை, விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சை மற்றும் விட்ரெக்ட்மி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் கண்புரை உள்ளவர்களுக்கு கோவை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் இலவசமாக IOL லென்ஸ் உடன் கூடிய கண் கண்புரை அறுவை சிகிச்சை வழங்கப்படும். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வோ ருக்கு மருந்து மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது.
அறுவைச்சிகிச்சை செய்ய விரும்புவர்கள் ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என முகாம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமில் 80-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் ஆறு பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். தொடர்ந்து கோவைப்புதூர் ஸ்ரீரடி சாய் சேவா ஹாலில் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி, வட்டார தலைவர் சதீஷ்குமார், மாவட்டஅமைச்சரவை ஆலோசகர் அலையன்ஸ் பிரபாகரன்,மாவட்ட தலைவர் அலையன்ஸ் கோபாலகிருஷ்ணன், ஹில் சிட்டி மாவட்ட தலைவர் அலையன்ஸ் டி எஸ் குட்டன், பிஆர்ஓ சரவணராஜா மற்றும் அலையன்ஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu