டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: மாவட்ட நிர்வாகம் தகவல்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: மாவட்ட நிர்வாகம் தகவல்
X
கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 17 ல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Group IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17ம் தேதி அன்று தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துஇன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உள்ள அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனவும் இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி. பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு https: //tamilnaducareerservices. tngov. in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டினை எடுத்துகொண்டு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது studvcircleche@gmail. com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!