கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் கைது

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் கைது
X

Coimbatore News- கோவையில் கார் வெடிப்பு வழக்கு (கோப்பு படம்)

Coimbatore News- தமிழகம் முழுவதும் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Coimbatore News, Coimbatore News Today- கடந்த 2022 ம் ஆண்டு நடந்த கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் அரபிக் கல்லூரிகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்ட முயற்சித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அரபி கல்லூரிகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவு திரட்டப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் என்.ஐ.ஏ சோதனையில் ஆறு லேப்டாப், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி கார்டுகள் மற்றும் 3 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அடிப்படை வாத சிந்தனைகளை விதைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியதாக நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அடிப்படைவாத சிந்தனைகளுடன் இருப்பவர்கள் என்பதும், சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு திரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி கோவைய பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன், குனியமுத்தூர் கேலக்ஸி கார்டனை சேர்ந்த இஷ்ரத், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் அரபிக் கல்லூரியின் ஆசிரியராக முகமது உசேனும், அரபி பள்ளியின் ஆசிரியராக இஸ்லாத்தும் இருந்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story