போதை பொருட்கள் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளது - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Former DGP Interview To Reporters
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சி.எம்.எஸ். மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்து, அவரும் கலந்து கொண்டு ஓடினார். இரண்டு கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தைத் துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்தோம்.இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது. இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது.
மேலும் இதற்காக கோவையில் இது மாதிரியான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்துவது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்தார்.மேலும் இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை,இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது. குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும், அதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu