ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு நிர்வாகிகள் தேர்தல்: ஆட்சியர் அறிவிப்பு

ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு நிர்வாகிகள் தேர்தல்: ஆட்சியர் அறிவிப்பு
X

பைல் படம்

ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர், உறுப்பினர்களுக்காக தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார்

ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை (20-ந் தேதி) நடைபெறுமென மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார். திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8. 30 மணி முதல் 9. 30 வரை பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9. 30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10. 30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப்பெறுதலும் நடைபெறுகிறது. தொடர்ந்து, வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10. 45 மணிக்கு வெளியிடப்படுகிறது. 11. 30 மணி முதல் மதியம் 12. 15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!