மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலியானது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலியானது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
X

Coimbatore News- கோவையில், மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலியானது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ( மாதிரி படம்)

Coimbatore News- மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலியானது குறித்து, ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் இந்திய ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டு இருத்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர். குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கோவை வடமதுரை மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது பேட்டி அளித்த அதிகாரிகள், குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர் எனவும், பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள் அவர்கள் போட்டு இருக்கின்றனர் எனவும், தெரு விளக்கு போடும் போது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் ஆய்வு செய்ய வந்ததாகவும், இதை அறிக்கையாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!