துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன் கைது

துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன் கைது
X

பைல் படம்.

பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை அப்பகுதிவாசிகள் மடக்கி பிடித்தனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வெங்கிட்டா புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (58). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அலுவலகம் சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்லில் உள்ளது. சம்பவத்தன்று இந்த குடியிருப்புக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டவுன்ஹாலை சேர்ந்த கூலித் தொழிலாளி நெல்சன் (27) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!