பறவைகள் விலங்குகளுக்கு நீரும் உணவும் வழங்க முன் வருமா உங்கள் மனசு..
பைல் படம்
நம்மைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறு பறவைகளையும் நாம் காப்பற்ற வீடுகளில் திறந்தவெளியில் நீர், உணவு வழங்க பொதுமக்கள் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர் விகாஸ் மனோட் தெரிவித்துள்ளார்.
கோவையில் தற்போது காலம் வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்து வருகிறது. அதிகாலையில் வேலையில் மட்டும் பணியின் தாக்கம் சற்று உள்ளது. இந்தகால நிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
மனிதர்களால் இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும் உணவு இல்லாமல் கூட கொஞ்சம் வாழலாம், நீரின்றி வாழ முடியாது எனவே நம்மைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறு பறவைகளையும் நாம் காப்பாற்றுவோம் அவர்களின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் வைப்போம். தானியங்களை தூவுவோம். இது போன்ற உதவிகளை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்து வருகிறார் கோவை ராம் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் விகாஸ் மனோட்.
இது குறித்து அவர் கூறுகையில், கோடைகாலம் மற்றும் இன்றி தினமும் நான் பறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் தீவனங்கள் வைப்பதில் வாழ்க்கையாக கொண்டு வருகிறேன். விலங்குகள் பறவைகளுக்கு இந்த வேலை செய்வது நான் புண்ணியமாக கருகின்றேன். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.
பறவைகளுக்கு தண்ணீருடன் சிறுதானியமும் உணவு பொருட்களையும் கொடுத்து வருகின்றேன். மனிதர்களின் தாகத்தை தீர்க்க சமூக அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைப்பது மனிதநேயமாக பார்க்கப்படுகிறது. மனித நேயத்தை காட்டிலும் வாயில்லா ஜீவனுக்கும் பறவைகளுக்கும் வீடுகளில் திறந்தவெளியில் நீர், உணவு வழங்க பொதுமக்கள் முன் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கோடைகாலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்கூட மிகக் கடினமானதாகும். பறவைகளும் விலங்குகளும் கோடையைச் சமாளிக்கும் விதமே அலாதியானது.சிலவகைப் பூச்சிகள் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் தம் உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கரையான்கள் தமது புற்றுகளில் எண்ணற்ற நுண்துளைகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தம் இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக் கொள்கின்றன.
யானைகள் கூட்டம் கூட்டமாகத் தண்ணீரைத் தேடி அலைவது கோடையில்தான்! சில யானைகள் தரைக்கடியில் நீர் இருப்பதை உணர்ந்தால் தமது துதிக்கையால் நீர் வரும்வரை மண்ணைத் தோண்டிக்கொண்டே இருக்கும்.மான்கள் பெரும்பாலும் நின்று கொண்டோ, ஓடிக் கொண்டோதான் இருக்கும். ஆனால், அவை தரையில் அமர்ந்துவிட்டால், தம் உடல் வெப்பத்தை நிலத்திற்குக் கடத்துகின்றன என்று அர்த்தம்.
தங்களது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்ள சில விலங்குகள் வியர்வையை வெளிவிடுகின்றன. நாய் தனது நாவின் மூலம் வியர்வை சிந்தும்.பொந்துகளில் மறைந்து வாழும் சில உயிரினங்கள் அதிக உமிழ் நீரைச் சுரந்து, தம் உடலை நக்கிக் கொள்வதன் மூலம் தமது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்கின்றன.
பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அவற்றின் நீர்ச்சத்து முழுவதும் சுவாசித்தலின்பொழுது ஆவியாகி விடுகின்றது. இதைத் தவிர்க்க அவை கடும் கோடை காலங்களில் தமது தொண்டைப் பகுதியை வேகமாக அசைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் நீர் இழப்பைச் சரி செய்து கொள்கின்றன.
கழுகு, வல்லூறு போன்ற பெரிய பறவைகள் தமது சிறகுகளை அசைக்காமல் மிக உயரமாகப் பறப்பதன் மூலம் தமது உடல் வெப்பநிலையைச் சரிசெய்து கொள்கின்றன.பெரும்பாலான பறவைகள் கோடை காலத்தில் நீர் நிலைகளை நாடிச் செல்கின்றன.விலங்குகளும் நீருக்குள் மூழ்கித் தம் உடலை நனைத்துக் கொள்வதன் மூலம் கோடை வெப்பத்தைச் சமாளிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu