கோவை மருதமலை இளைஞர் லண்டனில் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியுமா?

கோவை மருதமலை இளைஞர் லண்டனில் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியுமா?

லண்டனில் கொலை செய்யப்பட்ட விக்னேஷ்.

கோவை மருதமலை இளைஞர் லண்டனில் கொலை செய்யப்பட்டு உள்ளதால் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலனியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (வயது36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில், கடந்த பிப்14 ஆம் தேதி தான் பணியாற்றும் ஹோட்டலில் இருந்து சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மீது மோதி விட்டு அவரை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் காவல் துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா எடுத்து வர தந்தை பட்டாபிராமன் சென்னையில் உள்ள அயலக நலத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அங்குள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் விசாரனைக்கு பின் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறும் போது, ”கடந்த 14ல், மகன் விக்னேஷ் விபத்தில் இருந்ததாக தகவல் கூறினார்கள். இரண்டு நாட்கள் கழித்து கொலை செய்துவிட்டதாக கூறினார்கள். கொலை செய்யும் அளவிற்கு அவருக்கு எதிரிகள் இல்லை. மகன் இறந்து 10 நாட்கள் ஆகியும், லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இறந்த மகனின் இறுதி மரியாதையை முறைப்படி செய்ய வேண்டும். தமிழக அரசும், தமிழக முதல்வர் தலையிட்டு மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story