கோவையில் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்

கோவையில் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்
X

கோவை மாவட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசினார்.

திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில், பேசிய மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், “கோவையின் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இது கோவை வளர்ச்சிக்கு திமுக எடுத்த சான்றுகள். அவினாசி சாலை மேம்பாலங்கள், ஒண்டிப்புதூர் இரயில்வே கடவு மேம்பாலம், நீலம்பூர் புறவழிச்சாலை, சிங்காநல்லூர் இரயில்வே கடவு மேம்பாலம், வட கோவை மேம்பாலம் என கோவையில் 100 க்கு 90 சதவீத மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு புறவழிச்சாலை அமைக்க 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்படி கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக செய்த சாதனைகள் பல. ஜவுளி பூங்கா, சுந்தராபுரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை, மோப்பிரிபாளையத்தில் தொழிற்பேட்டை என திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. பில்லூர் 3 ம் குடிநீர் திட்டம் முதற்கட்டமாக 173 எம்எல்டி குடிநீர் வருவதற்கான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

திமுக ஆட்சியில் தான் சிறுவாணி குடிநீர் திட்டத்தை, கேரள அரசுடன் புதுப்பித்துக் கொடுத்தவர் கலைஞர். பில்லூர் 2 ம் குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது துவக்கி வைத்தார். ஆழியார் குடிநீர் திட்டத்தை இன்றைய முதல்வர், அன்று துணை முதல்வராக இருந்தபோது துவக்கி வைத்தார். குடிநீர் திட்டங்களை அற்புதமாக துவக்கி வைத்தவர் தலைவர் கலைஞர், இன்றைய முதல்வர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை குறைந்த கட்டணத்தை வரையறைப்படுத்தியது தலைவர் கலைஞர். இன்றைய புதியதாக பொறுப்பேற்ற தமிழக அரசு 300 கோடி அளவில் பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. கோவையில் போக்குவரத்தை சீர் செய்ய 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ அமைக்க திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஏராளமான திட்டங்களை நமது முதல்வர் அவர்கள் துவக்கி வைத்து கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவற்றை எல்லாம் பொதுமக்களிடத்தில் எடுத்து சென்று நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். கோவையில் திமுக 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தை வென்றெடுப்போம், பாசிச பாஜகவை அடியோடு வேரறுப்போம்" என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்