கொடநாடு வழக்கை வேகப்படுத்தி கைது செய்வோம் என கூறியதை திமுக நிறைவேற்றவில்லை
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்
கோவை காந்திபுரம் பகுதியில், உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: திமுக ஆட்சி வந்தால் கொடநாடு வழக்கை வேகப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என கூறி இருந்தனர். ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை, கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோருவது தவறில்லை என்றார், கொடநாடு வழக்கு சாதரணமான வழக்காக இல்லை இதில், மர்ம முடிச்சுகள் நிறைய உள்ளது.
இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் பலம் கூடிக்கோண்டே இருக்கிறது, மோடி அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டிருக்கிறது, அதனால் தான் கலவரத்தை உண்டாக்குகிறார்கள். மணிப்பூரை போல இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சி அவர்களிடம் உள்ளது. இந்த அரசாங்கத்தின் கொள்கையால் பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசை எதிர்த்து ஏன் எஸ். பி. வேலுமணி போராட மறுக்கின்றார் மத்திய அரசாங்கம் எவ்வளவு கொடுமைகளை செய்கிறது, அதை பற்றி ஏன் அவர் பேச மறுக்கின்றார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற வேலைகளை உள்ளாட்சி அமைப்புகள் தான் செய்ய வேண்டும். குடிநீர் வழங்கும் திட்டத்தை கூட மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகத்தால் செய்ய முடியாதா? எதற்காக கார்பரேட் நிறுவனத்துக்கு தரவேண்டும். ஆளும் கட்சியின் தயவு இல்லாமல், உப்பு தண்ணி டெண்டரை கூட எடுக்க முடியாது என்ற நிலை உள்ளது. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவை பந்தய சாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கன்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டபடி இந்த ஆர்பாட்டம் நடைபெறும் என்றார் கே. பாலகிருஷ்ணன்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூகே சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu