மகளிர் உரிமைத் திட்டத்தில் வாக்குறுதியை திமுக மீறிவிட்டது: பிரேமலதா விஜயகாந்த்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த்
தி.மு.க.வின் மகளிர் உரிமைத் திட்டத்தில் வாக்குறுதியை மீறிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு முன் அனைத்து பெண்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி தற்போது தகுதியான பெண்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும் என்று தி.மு.க எடுத்துள்ள நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம் அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1,000 நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.ஏழைகள், விதவைகள் அல்லது ஊனமுற்றோர் போன்ற "தகுதியுள்ள" பெண்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது இது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை மீறும் செயலாகும்
அனைத்து பெண்களுக்கும் அவர்களின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.. நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பூஜைக்காக வந்துள்ளேன் அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது அதில் கலந்து கொள்ளத்தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25ம் நடைபெற உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். அதனை அடுத்து, கட்சியின் வளர்ச்சி தொடர்பாக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்.அதற்குப் பிறகே தேர்தலுக்கு முன்பு கூட்டணியா இல்லையா என்பதை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார்.
இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. எனவே இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார் பிரேமலதாவிஜயகாந்த்.
பிரேமலதாவிஜயகாந்தின் கருத்துக்கு திமுக எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும், பெண்களுக்கான உரிமைத் திட்டம் ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதும், அதை எப்படி கையாள்வது என்பதில் திமுக கவனமாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu