கோவை மாநகராட்சி வார்டுகளில் புதிய கட்டிடப்பணிகள் தொடக்கம்

கோவை மாநகராட்சி வார்டுகளில்  புதிய கட்டிடப்பணிகள்  தொடக்கம்
X

கட்டுமானப்பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் , பூமிபூஜை செய்து , பணியினை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி வார்டுகளில் புதிய கட்டிடப்பணிகளுக்கான பூமி பூஜையை மேயர் தொடக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மேற்கு மண்டலம் வார்டு எண். 33 க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிரபு நகரில் உள்ள மாநகராட்சி குப்பைகிடங்கு பகுதியில் ரூ. 36 இலட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டர் நீளம் , 8 அடி உயரத்திற்கு கட்டப்படவுள்ள சுற்றுசுவர் கட்டுமானப்பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் , பூமிபூஜை செய்து , பணியினை தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மண்டல தலைவர் கே. ஏ. தெய்வயானை தமிழ்மறை , மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி , உதவி செயற்பொறியாளர் ஹேமலதா , உதவி பொறியாளர் எழில் , சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் , வார்டு எண். 92 க்குட்பட்ட செந்தமிழ் நகர் SBM திட்டத்தின்கீழ் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் மாநகராட்சி பொது கழிப்பிட கட்டுமானப் பணியை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து. பணிகளை விரைவாகவும் , தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இதில், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் , தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி , மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், அப்துல்காதர் , உதவி ஆணையர் அண்ணாதுரை , உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி , உதவி பொறியாளர்கள் கனகராஜ் , சபரிராஜ், சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி மையத்தில் ஆணையர் ஆய்வு:

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 95 க்குட்பட்ட என். பி. இட்டேரி 9 வது வீதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!