சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் தகவல்
மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களால் நேற்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, தெற்கு, மத்தியம், வடக்கு மற்றும் மேற்கு ஆகிய மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
ரூ.48.30 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளால் பழுதடைந்த 602 எண்ணிக்கையிலான தார் சாலைகளை சுமார் 96.02 கிமீ நீளத்திற்கு புதுப்பிக்கும் பணிகளும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.21.72 கோடி மதிப்பீட்டில் 24/7 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளால் பழுதடைந்த 299 எண்ணிக்கையிலான தார் சாலைகளை சுமார் 47811கி.மீ நீளத்திற்கு சீரமைக்கும் பணிகளும் மற்றும் மாநில நிதிக்குழு சிறப்பு நிதியின் கீழ் ரூ.24.79 கோடி மதிப்பீட்டில் 274 எண்ணிக்கையிலான மண் சாலைகளை சுமார் 36.005 கி.மீ நீளத்திற்கு தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 5 மண்டலங்களில் நடைபெறும் 24x7 குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்க பல இடங்களில் வெட்டப்பட்டு, பழுதடைந்த 1918 எண்ணிக்கையிலான தார் சாலைகள், பேட்ச் வேலைகள் மேற்கொள்வதற்காக ரூ.50.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும், இப்பணிகள் துவங்கப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். அதே போன்று, கோயம்புத்தூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்க வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பல பகுதிகளில் சாலைகள் வெட்டப்பட்டு பழுதடைந்துள்ளது. அதில் 301 தார் சாலைகளை சீரமைக்க ரூ. 10.16 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பணிகளும் விரைவில் முடிவுற்று சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu