இடைக்கால பட்ஜெட்டில் உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் - இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு
Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த இந்திய தொழில் கூட்டமைப்பு
Coimbatore News, Coimbatore News Today- இடைக்கால பட்ஜெட் தொடர்பாக கோவை சுங்கம் பகுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானம், சாலை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்தாக அமையும். உலக அளவில் டிஜிட்டல் முதலீடுகளில் முதலிடத்தில் நாம் உள்ளோம். டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். டீப் டெக் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் அதிகரித்தாலும், சாதாரண ரயில்களும் இயக்கப்படும். சோலார் எனர்ஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில்களுக்கு என தனியாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பட்ஜெட்டில் 3 ரயில் காரிடர்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ரயில்வே காரிடர் திட்டம் வரவேற்கத்தக்கது. கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கோவை விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
விவசாய பொருட்களை சேகரித்து வைக்க நிதி ஒதுக்கீடு செய்வது வரவேற்கத்தக்கது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால் சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் சென்று கொண்டுள்ளது.
இ பஸ், டூரிசம் மேம்படுத்துதல் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. இடைக்கால பட்ஜெட் என்பதால் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளரும், எனத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu