தனியார் நிறுவனம் சார்பில் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணினி மையம்
பிரிகால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், தலைமை விருந்தினராக பங்கேற்று கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் மையத்தினை திறந்து வைத்தார்
கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 'கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது.
விழாவில், பிரிகால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், தலைமை விருந்தினராக பங்கேற்று, கம்ப்யூட்டர் மையத்தினை திறந்து வைத்து பேசுகையில், மாறிவரும் காலத்திற்கேற்ப மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கல்வி பயின்று, மாணவர்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இது உதவும். மாணவர்கள் கம்ப்யூட்டர் மையத்தினை நன்றாக பயன் படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். தொலை நோக்குப் பார்வையில், நாட்டின் வளர்ச்சிக்கு இத்தைய முயற்சிகள் மிகவும் அவசியமானவை. மாறிவரும் கல்விச்சூழலில் எதிர்கால நன்மை கருதி இது போன்ற முன்னெடுப்புகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வரும் ராகேஷை மனமார பாராட்டுகிறேன் என்றார்.
கன்சாலிடேடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ராமானந்த் பேசுகையில், சமூக நலனுக்காக, இது போன்ற நவீன கட்டமைப்பு வசதி உதவிகள் வெறும் பொறுப்பு சார்ந்தது மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறக்கிடைத்த நல்ல வாய்ப்புமாகும். அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் உள்ள எல்லோருமே, சமூகவளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டுமுயற்சிகள், எதிர்கால சந்ததியினருக்கு பிரகாசமான வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும்.
நவீன தொழில்நுட்பத்துடன், கற்கும் சூழல் வசதி மேம்பாடு மாணவர்களை உற்சாகப்படுத்துவதுடன், நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது மிகவும் பங்களிக்கிறது. இது போன்ற தனியார் நிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகள் , சமூக வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
இந்த அரசு மேனிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 100 க்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் கம்ப்யூட்டர் மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, பிற அவசியத் தேவையையும் பூர்த்திசெய்து வழங்கவுள்ளோம் என்றார்.
கன்சோலிடேட்டட் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் தாக்க்ஷாயினி ராகேஷ், இந்த முயற்சி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். கல்வியில் முதலீடு செய்வது எதிர்காலத்தின் முதலீடு ஆகும். மேலும் இந்த மாணவர்களுக்கு அந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் கன்சோலிடேட்டின் பங்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நாயக்கன்பாளையம் கிராமத்து அரசு மேனிலைப் பள்ளியில் 500 மாணவர்களுக்கு உதவும் வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள், தடையில்லா மின்சார சாதனம் மற்றும் கம்ப்யூட்டர் மையத்திற்கான அடிப்படை வசதிகள் டேபிள், சேர் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மையம், தடையில்லா மின்சார சாதனம், மேஜை, இருக்கைகள், மேலும் அடிப்படைத் தேவைச் சாதனங்கள் அனைத்தும் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu