கோவை அரசு பொருள்காட்சியில் குடும்பத்துடன் பார்வையிடும் பொது மக்கள்
பைல் படம்
கோவையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்புாண்டிலும் அரசு பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இந்த பொருட்காட்சியை கடந்த 13ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
அடுத்த 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை உட்பட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைத்துள்ளன.
மேலும், மாலை நேரத்தில் சூடாக சாப்பிட உணவுகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எது எடுத்தாலும் 5 ரூபாய் 10 ரூபாய் என நாம் குழந்தை பருவத்தில் பார்த்து வியந்த பொருள்களை கொண்ட கடைகளும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க சிறந்த இடமாக பொருட்காட்சி அமைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu